வண பிதா ஜெயநேசன் கைதுதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கிறிஸ்தவப் பாதிரியாரான ஜெயநேசன் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தெடர்புகளை கொண்டிருப்பவர் எனக் கூறப்படுகின்றது. அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்துக்குப் பொறுப்பாக இருந்த குறிப்பிட்ட அமைச்சர் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அந்தப் பொறுப்பு பிரதமரிடம் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட அமைச்சர் மற்றும் வண. பிதா ஜெயநேசனுடைய ஆதரவுடன் பல சி.டி.ம்.ஏ. தொலைபேசிகள் போர் இடம்பெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
‘கிறிஸ்ரியன் கெயர்’ என்ற மனிதாபிமான நிறுவனம் ‘லடர் ஹோப்’ என்ற அமைப்புடன் இணைந்து பணிபுரிந்து வருகின்றது. ‘லடர் ஹோப்’ நிறுவனத்தின் தலைவராக வண. பிதா ஜெயநேசனே இருந்து வருகின்றார். இலங்கையில் ‘கிறிஸ்டியன் கெயர்’ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளராகவும் இவரே பணிபுரிகின்றார்.
No comments:
Post a Comment