யாழில் இளைஞர் ஒருவரை காணவில்லை
யாழ்ப்பாணம் சுதுமலை வடக்கு மானிப்பாயைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் சுகுமார்(21) என்ற இளைஞர் கடந்த 06-08-2009 முதல் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் தங்கச்சியம்மா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவ தினம் மாலை 6.45 மணியளவில் மானிப்பாயிலுள்ள வீட்டிலிருந்து சங்குவேலியிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று பின்னர் அங்கிருந்து இரவு 8.00 மணியளவில் திரும்பியதாகவும் அதற்குப் பின்னரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment