விரைவில் மீள்குடியேற்றம்
மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்தவர்களை யாழ்.மாவட்டத்தில் மீளக் குடியமர்த்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். திருமலை மற்றும் யாழ். மாவட்டத்தில் பணியாற்றும் செயற்திட்ட அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்'வடக்கின் வசந்தம்' 180 நாள் வேலைத்திட்டம் வடமாகாணம் முழுவதும் வெற்றிகரமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றது. இதுதவிர யாழ். மாவட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகாணும் பொருட்டு பாதுகாப்பு தரப்புடன் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment