11 August 2009

எம் மக்களுக்கு இதய பூர்வமான நன்றிகள்- புளொட்

நடந்து முடிந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் எமது கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியை ஆதரித்து வாக்குகளை அளித்த எமது அன்புக்குரிய அனைவருக்கும் அமைப்பின் சார்பிலும் வேட்பாளர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். வவுனியா நகரின் அபிவிருத்தி, எமது பிரதேசத்தின் பாதுகாப்பு, இனப்பிரச்சினைக்கு நியாயமான ஒரு நிரந்தரத் தீர்வு ஆகிய எமது கொள்கைகளுக்கும் பத்து வருடங்களுக்கு முன்னர் முன்னைய நகரசபை நிர்வாகத்தில் திரு.ஜி.ரி.லிங்கநாதன் தலைமையில் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்கும், கழகம் பல்வேறு அழுத்தங்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இப்பகுதியில் ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளித்தும் நகரின் கணிசமான மக்கள் எமக்கு ஆதரவளித்தபோதும், உணர்ச்சிகளுக்கும் வெறும்சொல் அலங்காரங்களுக்கும் ஏமாந்தும் சுய லாபங்களுக்காக பெரும் சலுகைகளைப் பெற்றுத் தருவோமென கூறி போட்டியிட்ட சிலரது பிரச்சாரங்களுக்கு ஏமாந்தும் ஒரு சாரார் வாக்களித்துள்ளார்கள்.எது எவ்வாறிருப்பினும் வவுனியா நகர்வாழ் மக்களின் நலன்களுக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை புதிய நகரசபை நிர்வாகம் மேற்கொள்ளுமாயின் அந்நடவடிக்கைகளுக்கான ஆதரவினை எமது நகரசபை அங்கத்தவர்கள் நல்குவார்கள்.

No comments:

Post a Comment