12 August 2009

அதிகார பகிர்வு ஏற்படாவிட்டால் மீண்டும் வன்முறை தலைதூக்கும் அபாயம் -றொபேட் பிளேக்

இலங்கையில் போர் முடிவடைந்துள்ள நிலையில், சிறுபான்மை இனமான தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க இலங்கை அரசு தவறினால், நாட்டில் வன்முறைகள் மீண்டும் புதிதாக வெடிக்கலாம் என்று அமெரிக்க அரசின் தெற்காசியாவுக்கான துணை இராஜாங்க அமைச்சர் றொபேட் பிளேக் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிர்வாகத்தின் கீழ் முகாம்களில், தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள், மேலும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும். முகாம்களில் தமிழ் மக்கள் அவர்களின் விருப்பத்துக்கு எதிராக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார். இது தொடர்பாக இலங்கை அரசு கருத்து வெளியிடும் போது, தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களில் விடுதலைப் புலிகள் அடையாளம் காணப்பட்ட பின்னர் பொதுமக்கள் தமது வீடுகளுக்கு திருப்பி அனுப்பபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment