12 August 2009

யாழ். மேயராக யோகேஸ்வரி

யாழ். மாநகரசபையின் புதிய மேயராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் ஈ.பி.டி.பி.யின் சார்பில் போட்டியிட்ட திருமதி. பற்குணராஜா யோகேஸ்வரியும், பிரதி மேயராக துரைராஜா இளங்கோ (றீகன்)நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நியமிக்கப்படவுள்ளதாகவும், இத் தெரிவு குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட துரைராஜா இளங்கோ 3387 விருப்பு வாக்குகளையும் திருமதி. பற்குணராஜா யோகேஸ்வரி 1250 விருப்பு வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஆசிரியராக கடமையாற்றிய பற்குணராஜா யோகேஸ்வரி தற்போது யாழ்.மாநகரசபையின் மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்.மாநகர சபையில் ஐ.ம.சு.மு. ஆட்சியமைக்கத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் வாக்குகள் அமைந்துள்ளன. முஸ்லிம்கள் அரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யென்பது யாழ்.தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளனர். பிரதிமேயர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும். 1990 ஆம் ஆண்டு அகதிகளாக வெளியேறும் போது சட்டத்தரணி ரமீஸின் தந்தை பிரதிமேயராக இருந்தார். நாம் மீண்டும் மீள்குடியேறும் போது அவரது மகன் றமீஸ் பிரதிமேயராக இருக்க வேண்டுமென யாழ் மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment