கொழும்பு - யாழ். சொகுசு பஸ் சேவை விரைவில் ஆரம்பம் : போக்குவரத்து அமைச்சு
கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான சொகுசு பஸ் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்திருக்கின்றது. முதற்படியாக 5 சொகுசு பஸ்களுக்கு இதற்கான அனுமதி வழங்கப்படும்.அத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா நகரங்களுக்கும் சொகுசு பஸ்களைப் போக்குவரத்தில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, யாழ்ப்பாணம் கொழும்புக்கிடையில் சாதாரண பஸ் சேவை மதவாச்சி வரை தொடர்ந்து நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சாதாரண பஸ் போக்குவரத்துக்கு 425 ரூபாவும் சொகுசு பஸ் சேவைக்கு 1,000 ரூபாவும் கட்டணமாக அறவிடப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment