வடக்கில் அரசுக்கு கிடைத்த வெற்றி சரித்திரப் பிரசித்தி வாய்ந்தது-ஜனாதிபதி
கடந்த முப்பது வருடங்களாக ஜனநாயகம் செயலற்று முடங்கிக் கிடந்த வடபகுதியில் ஜனநாயகம்; வேகமாக உயிர் பெற்று வருவதையே அங்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் வெற்றி தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட செய்தியில் தெரிவித்துள்ளார்
வடக்கில் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வெற்றி சரித்திரப் பிரசித்தி வாய்ந்ததாகும். நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் வடக்கில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் அதன் முயற்சிகளுக்கும் மேலும் ஆதரவாக நீண்ட காலடியெடுத்து வைப்பதாக இந்த வெற்றிகள் அமைந்துள்ளன.
பதுளை மொனராகல யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகியவற்றுக்கான தேர்தல்களில் ஆளும் கட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றிகள் இந்த நாட்டை நேசிக்கும் மக்களுக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியாகும்.
இந்த நாட்டை மீண்டும் ஜக்கியப்படுத்தவேண்டுமென விடுத்த எனது வேண்டுகோளை நான்கு மாவட்ட மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளர் என்பதை இத்தேர்தல்களின் முடிவு எடுத்துக்காட்டுகின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment