30 August 2009

முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு மன்னிப்புக் காலம்

கிழக்கில் இயங்கும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு மற்றுமொரு பொதுமன்னிப்பு காலம் வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்புத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. மூன்று வாரங்களுக்கு முன்னர் ஆயுதங்களை கையளிக் பாதுகாப்பு தரப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். ஆயுதங்களைக் களையுமாறு முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு விடுக்கப்பட்ட சகல கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பிலான புலனாய்வு விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் எடிசன் குணதிலக்க முஸ்லிம் ஆயுதக் குழுக்களிடம் பெருமளவு ஆயுதங்கள் உள்ள போதும் சொற்ப அளவிலான ஆயுதங்களே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment