18 August 2009

மக்கள் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும் - ஜே.வி.பி.

எமது நாட்டிற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அவசியமா? இல்லையா? என்பது தொடர்பாக மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு இணங்கி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டாரா எமது கட்சியுடன் ஜனாதிபதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டாரா? இல்லையா? என்பதை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் கடந்த 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஜே.வி.பி.யின் சார்பில் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவும், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கையெழுத்திட்ட உடன்படிக்கையில் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதாக இணக்கம் காணப்பட்டது. அத்தோடு மகிந்த சிந்தனை தேர்தல் கொள்கையிலும் இது வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்காகவே மக்கள் ஆணை வழங்கினர். எனவே இவை தொடர்பில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதுவுமே தெரியாது. உடன்படிக்கையையோ மகிந்த சிந்தனையையோ வாசித்துக்கூட இருக்க மாட்டார். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐ.தே.க இலிருந்து கொண்டு இவற்றை விமர்சித்தவர் எதிர்க்கட்சியில் இருப்பதற்கே மக்கள் ஆணை வழங்கினார்கள்

1983இல் தமிழ் மக்களை கொலை செய்வதற்கு ஜே.ஆரின் ஆட்சி அனுமதி வழங்கியது. இந்த யுத்தம் தோன்றியதற்கும் பிரிவினைவாத பயங்கரவாதம் பலப்படவும் நிறைவேற்று அதிகாரமே காரணமாக அமைந்தது. இந்த முறைமையினாலேயே யுத்தம் ஆரம்பமானது. மேலும் இது தொடரப்படுமானால் மீண்டும் யுத்தச் சூழ்நிலை உருவாகும்.

No comments:

Post a Comment