தேர்தல் திருத்தச் சட்டமூலம் சிறிய கட்சிகளை இல்லாமல் செய்யும்
உத்தேச பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரான மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்தார். மேலும் உத்தேச சட்டமூலமானது சிறிய கட்சிகளை இல்லாமல் செய்வதற்கே என்றார். இது தொடர்பாக அவர் இராஜகிரியவிலுள்ள கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது விபரிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டார நாயக்கவின் 50 வருட மறைவு தினம் அடுத்த மாதம் வருகின்றது. கட்சி கடந்த 50 வருடங்களாக பல சதிகளையும் பிரச்சினைகளையும் முறியடித்து வெற்றிபெற்று வந்துள்ளது. கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது. இது நிறைவேற்றப்பட்டால் மதம் இனம் என்ற பெயருடைய கட்சிகள் இல்லாமல் செய்யப்படும். இதன்படி சிஹல உறுமய, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடைய பெயர்களை அந்த அரசியல் கட்சிகள் பாவிக்க முடியாது. இதேவேளை, இச் சட்டமூலத்தின் ஒரு விடயமாக ஒரு கட்சி தனது சின்னத்தில் இரு தடவை பொதுத் தேர்தலில் போட்டியிடாவிட்டால் அது இல்லாமல் போகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1994, 2000 மற்றும் 2001 பொதுத் தேர்தலில் பொது ஜன ஐக்கிய முன்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட்ட நிலையில் 2004 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் சுதந்திரக் கட்சி போட்டியிட்டது என்றார்
நாமும் இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் அதேவேளை, புதிய சிஹல உறுமயவும் மனுவைத் தாக்கல் செய்யவுள்ளது. குறிப்பாக சிறிய கட்சிகளை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைக்கு எதிராகவே மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது. சிறிய கட்சிகள் மாகாண சபை மற்றும் பிரதேச சபைகளில் போட்டியிடுகின்றன.
இதனை இல்லாமல் செய்வதற்கே ஒரு கட்சி பொதுத் தேர்தலில் 2 தடவை சின்னத்தில் போட்டியிடாவிட்டால் இல்லாமல் போகுமென புதிய சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கையாகும். இது சர்வாதிகாரப் போக்குக்கே வழிவகுக்கும் என்றார்
No comments:
Post a Comment