இலங்கையில் நிவாரண பணிகளில் வேகம் தேவை: தமிழக முதல்வர்
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நடைபெற்று வரும் “நிவாரணப் பணிகளில் இன்னும் வேகம் தேவை” என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் திங்கட் கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “இலங்கையில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் திருப்தி அளிக்கிறதா?' என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ""இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில், இன்னும் வேகம் தேவை. இது தொடர்பாக, மத்திய அரசிடம் நமது கருத்தை எடுத்துச் சொல்லி வலியுறுத்துவோம். தமிழக அரசின் சார்பில் நான்கு தவணைகளாக நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன. 4-வது தவணையாக அனுப்பப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ. 15 கோடி ஆகும். மத்திய அரசின் சார்பிலும் பொருள்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன'' என்றார்.-
தினமணி
No comments:
Post a Comment