சகல இன மக்களும் சமமாக வாழக் கூடிய வகையில் தீர்வுத்திட்டம்- பேராயர் ஜோசப் ஸ்ப்ரேரி
சகல இன மக்களும் சமமாக வாழக் கூடிய வகையில் தீர்வுத் திட்டத்தை வகித்துக் கொள்வது மக்களின் கைகளிலேயே தங்கியிருப்பதாக இலங்கைக்கான வத்திக்கான் துர்துவர் பேராயர் ஜோசப் ஸ்ப்ரேரி ஆண்டகை கூறுகின்றார்.
மட்டக்களப்பிற்கான 4 நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அவர் நேற்று மாலை ஆயர் இல்லத்தில் பல்சமய ஒன்றிய பிரதிநிதிகளுடன் இடம் பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார்.
இச் சந்திப்பில் கலந்து கொண்ட பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள் "அரசாங்கம் போரில் பெற்றாலும் தமிழ் மக்களின் மனங்களை இன்னமும் வெல்லவில்லை.அவர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்று முன் வைக்கப்பட்டு அமுல் படுத்தப்படும் பொழுது தான் தமிழ் மக்களின் மனங்களை வெல்லக் கூடியதாக இருக்கும் " என சுட்டிக் காட்டினர்.
கடந்த காலங்களில் தமிழ் அரசியல் தலைமைகள் பல்வேறு பேச்சுவார்ததைகளில் ஏமாற்றப்பட்டமை, மற்றும் அண்மைக்கால யுத்த சூழ்நிலையின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகள் போன்றன குறித்தும் இச் சந்திப்பின் போது எடுத்துக் கூறிய பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள் வவுனியா அகதி முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்களின் விரைவான மீள் குடியேற்றத்தின் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினர்.
இச் சந்திப்பின் போது மட்டக்களப்பு - திருகோணமலை ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, இராமகிருஷ்ண மிஷன் முதல்வர் சுவாமி அஜராத்மானந்தாஜி ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, வர்த்தக பிரமுகரான அல்ஹாஜ் கே.எம்.எம். கலீல் உட்பட பல்சமய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment