இலங்கையில் புதைகுழிகளும் விதவைகளும் (பகுதி 1)-
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
03.09.039 அன்று கிட்லரின் கொடுமையைத் தாங்காத மேற்கு நாடுகளில் ஒன்றான பிரித்தானியா, ஜேர்மனியுடன் போர் தொடுக்கும் தங்கள் (இரண்டாம் உலக) யுத்தப் பிரகடனத்தை அறிவித்தது. தற்போது இதையிட்டுப் பல கருத்தரங்குகள் பிரித்தானிய வானொலிகளில் நடத்தப் படுகின்றன. இனியொரு உலக மகாபோர் வரக் கூடாது என்று கருத்தரங்கில பங்கு பற்றும் பலரும் சொல்கிறார்கள். ஆனால் இன்று அவர்களின் படைகள் ஈராக்கிலும் ஆப்கானஸ்தானிலும் கடும்போர் செய்கின்றன.. ஆயிரக்கணக்கான அப்பாவி; மக்கள் மேற்கு நாடுகளின் அதி உயர்ந்த ஆயுதங்களால் நாளாந்தம் அழிக்கப் படுகிறார்கள். இரண்டாவது உலக யுத்தத்தில் ஒட்டுமொத்தமாக இறந்தவர்கள் 50 கோடி மக்கள் என்று சொல்லப் படுகிறது. இந்தத் தொகையில் பெரும்பாலனவர்கள் யுத்தத்தில் ஒரு நாளும் ஈடுபடாத பொது மக்களாகும்.
ஜேர்மன் மக்கள் அமெரிக்க,பிரித்தானிய,ரஷ்யப்படைகளால் படுமோசமாக அழிக்கப்பட்டார்கள்.ஆயிரக்கணக்கான வருட சரித்திரத்தை வைத்திருந்த பாரம்பரிய ஜேர்மனிய, ஜப்பானிய நகரங்கள் இரவோடிவாக அழித்தொழிக்கப்பட்டன.
No comments:
Post a Comment