இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 6)
சிங்களரோடு கைகோர்த்து செயல்பட்ட தமிழ் உடைமை வர்க்கம்
விடுதலை பெற்ற ஆரம்ப காலத்தில் உழைக்கும் வர்க்கப் புரட்சி சார்ந்த சிந்தனைகள் சமூகத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் சிங்கள முதலாளிவர்க்கப் பிரதிநிதிகளோடு தமிழ் முதலாளிவர்க்கப் பிரதிநிதிகளும் கைகோர்த்துச் செயல்பட்டனர். அதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு மலையகத் தமிழர்களை வெளியேற்ற இந்தியாவுடன் இலங்கை ஆட்சியாளர்கள் செய்து கொண்ட ஒப்பந்தமும் அதற்குத் தமிழ் தேசிய முதலாளிகளின் பிரதிநிதிகள் அளித்த மனமுவந்த ஆதரவுமாகும். மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இலங்கையில் ஒரு ஒட்டுண்ணித்தனமான வாழ்க்கையை நடத்தவில்லை. மாறாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு போதிய ஆட்கள் அங்கு கிடைக்காததால் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து அங்கு வேலை செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டவர்களே அவர்கள். நெற்றிவேர்வை நிலத்தில் விழ அவர்கள் பாடுபட்டதன் பயனாக பெரும் அந்நிய செலாவணி இலங்கைக்குக் கிடைத்தது.
மேலும்...http://ww.sooddram.com/Articles/otherbooks/Sep2009/Sep062009_Keettu_6.htm
No comments:
Post a Comment