ஜனாதிபதி- பாதுகாப்புச் செயலாளருக்கு கௌரவ பட்டம்பயங்கரவாதத்திலிருந்து தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு கொழும்பு பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி பாராட்டிக் கௌரவித்துள்ளது.கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற இப்பட்டமளிப்பு வழாவில் ஜனாதிபதிக்கு கௌரவ ~சட்டக் கலாநிதி பட்டமும் பாதுகாப்புச் செயலாளருக்கு கௌரவ ~இலக்கியக் கலாநிதி பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் பேரருட்திரு ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகையின் தலைமையில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற இந்த விழாவில் சிரேஷ்ட அமைச்சர்கள், கல்விமான்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினர்களும் தாய்நாட்டுக்காக ஆற்றிய சேவைகள் பற்றி இந்த விழாவில் எடுத்துக் கூறப்பட்டதுடன் ஜனாதிபதியின் தூரதரிசனம் மற்றும் சிறந்த தலைமைத்துவம் என்பன பற்றி பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கான கௌரவ பட்டங்களை கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் வழங்கி கௌரவித்தார்.
No comments:
Post a Comment