இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 3)
விடுதலைப் போராட்டம் விளைவித்த ஒற்றுமை
எனவே அவை ஒன்று திரண்டு, ஒருங்கிணைந்து பொது எதிரியை எதிர்த்துப் போராடின. அப்போராட்டத்தின் விளைவாக பல தேசிய இன மக்களிடையே நல்லுறவும் ஏற்பட்டது. இலங்கையைப் பொருத்தவரை தமிழர் வாழும் பகுதிகளிலிருந்து தங்கள் படிப்பிற்கேற்ற அரசு வேலைகள் கிடைக்கும் போது சிங்களர் பகுதி என இவர்கள் கூறும் கொழும்பு போன்ற நகரங்களிலும் தமிழ் மக்கள் சென்று வாழ்ந்தனர். இதன் விளைவாக தேசிய இனங்களின் ஒன்று கலத்தலும் நிகழ்ந்தது. இது ஏகாதிபத்திய நிர்வாக வசதிக்காக அது கட்டாயப்படுத்தி ஒருங்கிணைத்ததனால் மட்டும் ஏற்பட்டதல்ல.இந்திய அனுபவம்இலங்கையைப் போன்றே இந்தியாவும் பல தேசிய இனங்களை கொண்ட நாடு. ஏறக்குறைய மிகப் பெரும்பாலான அம்சங்களில் இரண்டு நாடுகளின் சூழ்நிலையும் ஒன்றே. அப்படியிருக்கையில் இங்கும் இலங்கையைப் போன்றே ஏகாதிபத்திய ஆட்சியை நிலைநிறுத்த பிரிட்டிஷ் அரசு அதன் மிகவும் மேலான இராணுவ வலிமையைப் பயன்படுத்தியது. இருந்தாலும் பல சமஸ்தானங்களை தன்னுடைய நேரடி ஆட்சி அதிகாரத்திற்குள் அது கொண்டுவரவில்லை.
முழுமை http://www.sooddram.com/Articles/otherbooks/Sep2009/Sep042009_Keettu_3.htm
No comments:
Post a Comment