இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 4)
காலிகளும் கேடிகளுமே கலவரம் செய்பவர்கள்
எல்லாக் கலவரங்களிலுமே அவற்றில் ஈடுபடுபவர்கள் ஈடுபடும் இனங்களைச் சேர்ந்த கிரிமினல்களாகவும், கேடிகளாகவுமே பெரும்பாலும் இருப்பர். அவர்களின் நோக்கமும் கலவரத்தில் ஈடுபட்டு முடிந்த அளவு அகப்பட்டதை சுருட்டுவது என்பதாகவே இருக்கும். இத்தகைய கேடிகளும், கிரிமினல்களும் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான பல கலவரங்களில் பல சாதாரண சிங்களர்களை அவர்கள் தமிழர்களுக்கு பாதுகாப்பு தந்தனர் என்ற ஒரே காரணத்திற்காக தாக்கிய, கொலை செய்த சம்பவங்களும் உண்டு. சிங்கள இனவெறிவாதம் ஒரு வெறித்தனத்தை சாதாரண சிங்கள மக்களிடையே ஏற்படுத்த பல யுக்திகளை கையாளுகின்றது என்பது உண்மையே. ஆனால் அவற்றைப் போலவே சாதாரண சிங்கள மக்கள் மீது அவர்கள் அனைவருமே தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று பழிபோடும் போக்கும் இந்த தமிழ் அமைப்புகளிடையே உள்ளது என்பதும் உண்மையே.
மேலும்...http://www.sooddram.com/Articles/otherbooks/Sep2009/Sep042009_Keettu_4.htm
No comments:
Post a Comment