தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் காரணமாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாக இவ்வாறான சக்திகள் நினைப்பதும் தவறானது.
- தர்மலிங்கம் சித்தார்த்தன்
எங்களது மக்களின் அடிப்படை அபிலாஷைகளை விட்டுக் கொடுக்காமல் அரசியல் ரீதியாக ஒரு சரியான அதிகாரப் பரவலாக்கம் வேண்டுமென்று போராடும் அதே நேரத்தில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்கள் நீக்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாகவும் சுயகௌரவத்துடனும் வாழும் நிலை ஏற்பட வேண்டுமென்பதில் நாங்கள் கருத்தாகவுள்ளோம்". எமது மக்களின் பிரச்சினைகளை உணர்ச்சி பொங்கக் கூறி விட்டு, அதனையே அரசியலாக மாற்றி வியாபாரம் செய்ய நாம் தயார் இல்லை. எமது தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் சுயகௌரவத்துடன் வாழ வேண்டுமென்ற எமது இலக்கை அடையவோ அல்லது அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவோ ஒரு கட்சி வகையில் எம்மால் மட்டும் தனித்து நின்று செயற்பட முடியாது. இதற்கு அரசாங்கத்தின் உதவியும் எமக்குத் தேவைப்படுகிறது. கடந்த காலத்தில் வேறெங்கும் இடம்பெறாத அளவு அபிவிருத்திப் பணிகளை வவுனியாவில் நாம் செயது முடித்தோம். அரசுடன் நாம் வைத்திருந்த நல்லுறவே இதற்குக் காரணம். அதுமட்டுமல்ல, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முன்னெடுப்புகளுக்கும் எமது முழுமையான ஆதரவினை அரசுக்கு வழங்கி வந்துள்ளோம்.
No comments:
Post a Comment