இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 5)
கல்வி வாய்ப்புப் பெற்ற தமிழ் மக்கள்
கல்வியிலும், அரசு அலுவல்களிலும் பொருளாதாரா ரீதியாகவும் தமிழர்கள் ஓரளவு சிங்களர்களைக் காட்டிலும் மேம்பட்டு இருந்தது இவ்விசயத்தில் ஆட்சியாளர்களால் திறமையாகப் பயன்படுத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதி, சிங்களர்கள் வாழும் பகுதியைப் போல அத்தனை இயற்கை வளம்மிக்கதல்ல. அதனாலேயே அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தப் பல வகைகளில் போராட வேண்டியிருந்தது. கல்வி பெற்று எப்படியாவது அரசு அலுவல்களைப் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. அமெரிக்க மெத்தாடிஸ்ட் சர்ச் சார்ந்த நிறுவனங்கள் தமிழ் தெரிந்த அமெரிக்கர்களைக் கொண்டு தரமான ஆங்கிலக் கல்வியை தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணப்பகுதியில் வழங்கியதால் அதனை கற்று பிரிட்டிஷ் நிர்வாகத்தில் பல அலுவல்களில் 19ம் நூற்றாண்டில் கடைசிப் பகுதி முதற்கொண்டே தமிழர்கள் பணியமர்ந்துவிட்டனர். யாழ்ப்பாணத்தில் கல்வி பயின்ற தமிழர்களுக்கு இந்தியாவிலும் மலேசியாவிலும் கூட தரமான வேலைகள் கிட்டின.
மேலும்...http://www.sooddram.com/Articles/otherbooks/Sep2009/Sep052009_Keettu_5.htm
No comments:
Post a Comment