வன்னியில் தமிழ் மக்களுக்கு புலிகள் என்ன செய்தார்கள்?: அகதியாகியுள்ளவர்களின் அவலக்கதை - நடேசன்
கொழும்பிலிருந்து அதிகாலை 5.00 மணிக்கு வாகனமொன்;றில் புறப்பட்டுச்சென்றோம். அனுராதபுரம் கடக்கும்வரை எங்கள் பிரயாணம் சுமுகமாக இருந்தது. வழியில் எதுவித இராணுவ செக்கிங்கும் இல்லை. தம்புள்ளையில் நாங்கள் காலை உணவை சாப்பிட்டோம் மதவாச்சியை அடையும் முன்பே வழியெங்கும் இராணுவத்தினரை காணமுடிந்தது. அவர்கள் எமது வாகனத்தை நிறுத்தி விசாரிக்க ஆரம்பித்ததும், .எங்கள் பாஸ்போட்டை தயாராக வைத்திருக்கத தொடங்கினோம். கொழும்பில் ஒவ்வொரு பயணத்தின் போதும் இரண்டு அல்லது மூன்று இடங்களில் இராணுவ பொலிஸாரால் தடுத்து விசாரிக்கப்பட்டோம் ஆரம்பத்தில் சற்று எரிச்சல் மனத்துக்குள் ஏற்பட்டாலும் பின்பு அவர்கள் தங்களில் கடமையை சரியாக செய்வதைப் பார்த்து மதிப்பு வந்தது.மிகவும் மரியாதையாகவும் தொழில் முறையாகவும் நடந்து கொண்டார்கள்.
மதவாச்சியில் நான் மூன்று வருடங்கள் முன்பு வாழ்ந்திருக்கின்றேன்;. இப்பொழுது அந்தப் பகுதி முற்றாக அடையாளம் மாறிவிட்டது. பெரும்பாலான பிரதேசம் இராணுவமயமாகி விட்டது. அந்தப் பாதையால் வந்த சகல வாகனங்களும் சோதனைக்காக நிறுத்தப்பட்டு, பயணிகளுடன் அவர்களின் உடைமைகளும் கீழே இறக்கப்பட்டு பரிசோதித்து மீண்டும் ஏற்றினார்கள்.
இந்தச் சோதனைக்கு நாங்களும் எங்கள் வாகனமும் இலக்காகினோம். வெளிநாட்டு அமைச்சின் வாகனமாக இருந்தபோதிலும் எங்கள் வாகனத்துக்கு எந்த சலுகையும் இல்லை. சாதாரண மக்கள்போலத்தான் நாங்களும் நடத்தப்பட்டோம்.
No comments:
Post a Comment