03 September 2009

அரச காணிகளுக்குப் பெரும் கிராக்கி

கிழக்கு மாகாணத்தில் தற்போது அரச காணிகளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக மாகாண காணி ஆணையாளர் எச்.எம்.யசரட்ன தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், முதலீட்டாளர்கள் சுற்றுலாத் துறை மற்றும் விவசாயச் செய்கை ஆகியவற்றில் முதலீடு செய்ய கொண்டுள்ள ஆர்வமே இதற்குக் காரணம் என்றார் கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட தனியார் நிறுவனமொன்று அம்பாறை மாவட்டம் பதியத்தலாவையில் சோளச் செய்கைக்காக 400 ஏக்கர் காணியைக் கோரியுள்ளது. இதனைத் தவிர மேலும் 34 தனி நபர்களும், நிறுவனங்களும் குச்சவெளிப் பிரதேசத்தில் உல்லாசப் பயணத் துறையில் முதலீடு செய்ய காணி கோரியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் காணிகளுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கி காரணமாக திருகோணமலை நகரப் பிரதேசத்தில் தற்போது ஒரு பேர்ச் நிலம் ரூபா 4 லட்சம் வரை விலை கூறப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் 35 சதவீதமான காணிகள் மத்திய அரசின் கீழ் உள்ளன. மிகுதி காணிகள் மாகாண சபைக்குரியவை. எப்படியிருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல காணிகளும் மாகாண சபைக்கே உரியவை என்றும் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment