முகாம் முதியவர்கள்: முதியோர் இல்லங்களில் ஒப்படைப்பு
வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள முதியவர்களில் 93 பேர் இரண்டாம் கட்டமாக முதியோர் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்தக் கட்டத்தில் 500 பேர் முகாம்களில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும், இவர்களில் 300 பேர் அகில இலங்கை இந்து மாமன்றத்தினரிடமும், 200 பேர் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் முதியோர் இல்லத்தினரிடமும் ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயினும் 93 முதியவர்கள் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 47 பேர் அகில இலங்கை இந்து மாமன்றத்தினரிடமும், 46 பேர் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் முதியோர் இல்லத்தினரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment