12 February 2010

ஐ.நா வின் விசேட அறிக்கையாளர் அல்ஸ்ரனிம் குறித்து இலங்கை

நீதி விசாரணையற்ற கொலைகள், தன்னிச்சையான மரண தண்டனை நிறைவேற்றங்கள் தொடர்பான ஐக்கியநாடுகள் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரனின் சமீபகால செயற்பாடு குறித்து இலங்கை அரசாங்கம் ஐக்கியநாடுகள் ஸ்தாபன மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையிடம் விசனம் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய சனல்4 வீடியோ படக்காட்சி தொடர்பாக ஐக்கியநாடுகள் குழுவொன்று நடத்திய விசாரணை பற்றிய அறிக்கையை அல்ஸ்ரன் கடந்த மாதம் பகிரங்கமாக வெளியிட்டமை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் விசேட நடைமுறைகள் தொடர்பான கொள்கைகளையும் நடைமுறைகளையும் மீறுவதாக அமைந்துள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் நவநீதம்பிள்ளையை நேரில் சந்தித்து அரசாங்கத்தின் கவலையை தெரிவித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வீரகேசரி

No comments:

Post a Comment