சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு
தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக 10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிருந்து பதியப்பட்ட சாட்சியங்கள் அடங்கிய முழுமையான அறிக்கை இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்டவற்றில் தொழில் நுட்ப சாட்சியங்களும் ஆவணப்படுத்தப்பட்டு ள்ளதாகவும் இந்த சாட்சியங்களின் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று குறிப்பிட்ட இராணுவப் பேச்சாளர் இதே போன்று சமகாலத்தில் சரத் பொன்சேகாவுக்கும் அவருடன் தொடர்புடைய தனுன, அசோகா ஆகியோருக்கு எதிராகவும் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக சாதாரண சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்கள், வாக்கு மூலங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளதுடன் இவையும் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
அத்துடன், சரத் பொன்சேகா, மருமகன் தனுன, அவரது தாயார் அசோகா ஆகியோர் மீதான பண பரிமாற்று மோசடி தொடர்பான விசாரணைகள் யாவும் வெளிப்படைத் தன்மையாகவே இருக்கும் என்றார்
No comments:
Post a Comment