மக்கள் பணிக்காக முல்லைத்தீவில் இரு அலுவலகங்கள்
மீள்குடியேற்றப்பட்ட முல்லைத்தீவு மக்களுக்கான பணிகளை இலகுபடுத்துவதற்காக, மாங்குளத்திலும், பாண்டியன் குளத்திலும் மீள்குடியேற்ற அமைச்சின் இரண்டு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் வேண்டு கோளுக்கமைய இவ்விரு அலுவலகங்கள் திறக்கப்பட்டன.2,718 குடும்பங்களைச் சேர்ந்த 6,787 பேர் துணுக்காயிலும் 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 6,216 பேர் பாண்டியன்குளத்திலும் மற்றும் ஒட்டுசுட்டானில் 217 குடும்பங்களும் மீள்குடியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment