
போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணை
போர்க் குற்றங்கள் தொடர்பில்,சுயாதீன விசாரணைகள் அவசியம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
போரின் போது இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சுயாதீன விசாரணைக்கு இணங்கவேண்டும். அத்துடன் இதற்காக சர்வதேச நாடுகளும் உதவ முடியும் என நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார்.
ஜெனீவாவில், நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் வருடாந்த அமர்வின் போது அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே நவநீதம்பிள்ளை இதனை வலியுறுத்தினார்.
கடந்த மே மாதம், யுத்தம் முடிவடைந்த நிலையில் இலங்கை அரசாங்கம், விமர்சனங்களைத் தகர்க்கும் வண்ணம் சமர்ப்பித்த தமது சொந்த யோசனை, சபையில் நிறைவேற்றப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது
வீரகேசரி
No comments:
Post a Comment