
ஜனாதிபதி - இந்திய இசை மேதை ரவிசங்கர் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு;ள்ள உலகப் பிரசித்திபெற்ற இந்திய இசை மேதை ரவி சங்கர் சர்மா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். இவரது இலங்கை விஜயம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவரை வாழ்த்தி அவருக்கு ஞாபகச் சின்னமொன்றையும் பரிசளித்தார்.
இந்தியாவில் பிறந்த ரவிசங்கர் சர்மா ஆசியாவில் மட்டுமன்றி முழு உலகிலுமுள்ள இசை ரசிகர்களின் அபிமானத்தையும் கௌரவத்தையும் பெற்றுக்கொண்டவர். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை யமைத்தவர். தமது இசைப்பணிக்காக “பிலிம் பெயார்” விருது உட்பட பல்வேறு விருதுகளைச் சுவீகரித்துக் கொண் டவர். உலகில் பல்வேறு நாடுகளிலும் இசைக்கச்சேரிகளை நடாத்தியுள்ள இவரது ‘கீத் மாதுரி 2010’ இசை நிகழ்ச்சி நாளை 7ம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள் ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment