06 March 2010

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் பேராதனை விஜயம்

இலங்கைக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் நாளை பேராதனை ஆங்கில கல்வியில் கல்லூரிக்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா - இலங்கை இடையே ஆங்கில உயர் கல்வி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் அவர் அங்கு பங்கு கொள்ளவுள்ளதாக கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எச்.எச்.ஆரியதாச தெரிவித்தார்.

இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லகம, கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சந்திப்பு ஆங்கிலக் கல்வித்துறையில் முன்னேற்றகரமான நடவடிக்கை ஒன்றுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாமென அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்

No comments:

Post a Comment