7வது பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் ஜனாதிபதி கலந்துகொள்வார்
ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.45 மணிக்குக் கூடவிருப்பதாக அறிவித்திருக்கும் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக கித்துல் கொட தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு முன்னர் சபையில் அமரவேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார்.முதலாவது சபை அமர்வின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சமுகம் தந்து உரையாற்றவிருப்பதுடன் அன்றைய தினம் சபாநாயகர் தெரிவுடன் உப சபாநாயகர், குழுக்களின் செயலாளர் சபை முதல்வர் ஆகியோரின் தெரிவுகளும் இடம்பெறவிருக்கின்றன. இதனையடுத்து சபை அமர்வு ஒத்தி வைக்கப்படுமெனவம் அவர் தெரிவித்திருக்கிறார்.
No comments:
Post a Comment