இலங்கை - அமெரிக்க கடற்படை திருமலையில் கூட்டு பயிற்சி
இலங்கை இராணுவமும் அமெரிக்கக் கடற்படையும் திருகோணமலையில் கூட்டாக மனிதாபிமானப் பயிற்சியை மேற்கொண்டதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்தது.இந்த நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ நிலையம், சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்கு அமைச்சு ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மனிதாபிமான உதவி வழங்குவது தொடர்பாகவே இந்தப் பயிற்சி நிகழ்வில் கவனம் செலுத்தப்பட்டதாக தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உணர்வு ரீதியான பாதிப்புக்கான மருத்துவப் பராமரிப்பு, வெடிக்காமலிருக்கும் பொருட்களை பாதுகாப்பான முறையில் செயலிழக்க வைத்தல், மனஅழுத்தம், நோய்த் தடுப்பு பராமரிப்பு தொடர்பான பயிற்சிகளும் இந்நிகழ்வில் உள்ளடக்கப்பட்டிருந்தது.அமெரிக்க, இலங்கை இராணுவ அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் 700 குடும்பங்கள் மத்தியில் சென்றுள்ளனர். சிக்கலான மனிதாபிமான ரீதியான சவால்களுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பாக சிறப்பான முறையில் இரு இராணுவங்களையும் சேர்ந்த அதிகாரிகளுக்கு இந்தக் கூட்டுப் பயிற்சி உதவியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் லாரிஸ்மித் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment