25 October 2009

'இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?” கேட்கிறார் - கனிமொழி

“போராட்டம் நடத்தியிருக்கிறோம்; கூட்டம் நடத்தியிருக்கிறோம். மனிதச் சங்கிலி நடத்தியிருக்கிறோம். முதல்வரே உண்ணாவிரதம் இருந்தார். இதற்கு மேல் இலங்கை பிரச்னையில், ஒரு மாநில அரசு, ஒரு மாநிலக் கட்சி என்ன மாதிரி நெருக்கடி கொடுத்திருக்க முடியும் என எனக்குப் புரியவில்லை,” என, தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறினார்.

சென்றுவந்த தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் குழு உறுப்பினரான கனிமொழி, அங்குள்ள நிலவரம் பற்றியும், அடுத்தகட்ட நடவடிக்கைள் பற்றியும் அளித்த சிறப்பு பேட்டி:

தமிழ் மாநாடு உட்பட, எல்லாவற்றுக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடும் முதல்வர், இலங்கை பயணத்துக்கு மட்டும், கூட்டணியோடு சுருக்கிக்கொண்டது ஏன்?

இலங்கைத் தமிழர் பிரச்னையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் உட்பட, தொடர்ந்து முதல்வர் எடுத்த எந்த நடவடிக்கையிலும் எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. மேலும், இது முதல்வருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு. அவர் நேரில் செல்ல இயலாத நிலை என்பதால், அவர் சார்பில், மத்திய அரசின் அனுமதியோடு கூட்டணிக் கட்சி எம்.பி.,க்கள் சென்றோம். இதில், அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
முழுமை http://www.sooddram.com/pressRelease/Oct252009_Kanimoli.htm

No comments:

Post a Comment