25 October 2009

முகாம்களில் மக்கள் தொடர்ந்தும் சுதந்திரமற்று மூடப்பட்டுள்ள நிலை வருத்தமளிக்கிறது-நீல் பூனே

இலங்கையின் மனிதாபிமான தேவைகள் பொருட்டான, உதவி வழங்குனர்களின் பொறுப்புக்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாக ஐ.நா வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி நீல் பூனே தெரிவித்துள்ளார்.மனிதாபிமனத் தேவைகள் தொடர்பான எமது கோரிக்கைகளுக்கு நன்கொடையாளர்களிடமிருந்து கிடைத்த பிரதிபலிப்பு சிறப்பாக இருந்தது.ஆனால் முகாம்களில் அடைக்கப்பட்ட நிலைமை குறித்து அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். முகாம்கள் தொடர்ந்தும் சுதந்திரமற்று மூடப்பட்டுள்ள நிலையிலேயே இருக்கின்றமை வருத்தமளிப்பதாக இணையத்தளம் ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.


பொது மக்கள் முகாம்களில் இருந்து வெளியேற்றப்படாமை மற்றும் பெருந்தொகையானவர்கள் விடுவிக்கப்படாமை போன்ற காரணங்களால், பெரும்பாலான உதவி வழங்குனர்கள் அடுத்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கான உதவிகள் குறித்து சிந்தித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில் உதவி வழங்குனர்கள் அவர்களின் முகவர்கள் மற்றும் செயற்திட்டங்களின் ஊடாக மனிதாபிமான பொறுப்புகளுக்கு உதவி வழங்குவது, மனிதாபிமான விளைத்திட்டத்தின் ஊடாக 2009ம் ஆண்டு தடுக்கப்பட்டுள்ளது.


பாரிய எண்ணிக்கையாக மக்கள் இடம்பெயர்ந்த காலக்கட்டத்தில் தேவையாக இருந்த 270 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் உதவி வழங்குனர்கள் பொறுப்புடன் செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


பிரதானமாக உணவு, தங்குமிடம், குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு திட்டங்களுக்காக பல்வேறு நிதியிடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த ஆண்டின் ஒக்டோபர் 23ம் திகதி வரையான காலப்பகுதியில் மனிதாபிமான விளைதிட்டத்தின் கோரிக்கைக்கு அமைய 150.092.037 டொலர்கள் அல்லது 57 சதவீதமான நிதி பாதுகாக்கப்பட்டுள்ளது.


7,194,828 டொலர்கள் வழங்கப்படவுள்ள நிலையில் மொத்த மனிதாபிமான நிதி 209,758,256 டொலர்களாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில் தற்போது 2010 ஆண்டுக்கான மனிதாபிமான நிகழ்சித்திட்டங்கள் தொடர்பில் முகவர்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


மக்களின் குடியமர்த்தல் திட்டங்களுக்காகவும் அவர்களின் இயல்பு வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதற்காகவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்
நன்றி- வீரகேசரி

No comments:

Post a Comment