19 November 2009

நலன்புரி கிராமங்களின் குறைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை- பசில் ராஜபக்ஷ

ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவிற்கும், த.தே.கூ இனருக்கும் இடையே ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற சந்திப்பின் போது நலன்புரி நிலையங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக த.தே.கூ உறுப்பினர்களின் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக த.தே.கூ இனர் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்த போது அதற்கான விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் வீடுகள் இல்லாதவர்களுக்கு 3,25,000 ரூபா பெறுதியான வீட்டினை அமைத்துக் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக த.தே.கூ இன் கிஷோர் எம்.பி தெரிவித்தார்.

மேலும் நலன்புரி நிலையங்களில் நிலவும், பால் மா, மரக்கறி தட்டுப்பாடு, முகாமில் உள்ளவர்களை உறவினர்கள் சென்று பார்ப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொண்டனர்.

No comments:

Post a Comment