26 November 2009

முகாம் மக்கள் விடுதலை: HRW வரவேற்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் காரணமாக இலங்கையின் வடக்கே இடம் பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவரையும் விடுவிப்பது என்ற இலங்கை அரசின் முடிவை அமெரிக்காவின் நீயூயார்க்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹ_மன் ரைட்ஸ் வாட்ச் எனும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வரவேற்றுள்ளது.

அதே ரேம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சட்டத்துக்குப் புறம்பாக ஆயிரக்கணக்கானோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு அது கூறியுள்ளது.

டிசம்பர் மாதம் முதல், முகாம்களில் இருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு நடமாடும் சுதந்திரம் அளிக்கப்படும் என்றும் இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்தது.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 11 ஆயிரம் பேர் வேறு பல முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment