12 December 2009

அம்பாறை மட்டக்களப்பில் அடைமழை 52,000 குடும்பங்கள் இடம் பெயர்வு

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில தினங்களாக பெய்துவரும் அடை மழைகாரணமாக இதுவரை 52,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்பாறை மாவட்டத்தில் 52,218 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1200 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


பிரதேச செயலக பிரிவு ரீதியாக கல்முனை- 7565, காரைதீவு- 2595;, சாய்ந்தமருது-6566, நிந்தவூர்- 7000, அட்டாளைச்சேனை- 5842, ஆலையடிவேம்பு- 5009 , திருக்கோவில்- 8426 சம்மாந்துறையில் 9,895 குடும்பங்களுமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்பாறை பதில் அரச அதிபர் தெரிவித்துள்ளார்

பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 6200 குடும்பங்களும், நாவிதன்வெளியில் 1800 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குளங்கள் நிரம்பி வழிகின்றன.

உன்னிச்சை குளத்தின் இரு கதவுகள் திறக்கப்பட்டு 4 1ஃ2 அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. உறுகாமம் குளத்தின் இரண்டு கதவுகள் திறக்கப்பட்டு 6 அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. அதே போன்று 31 அடி உயர நவகிரி குளமும் நிரம்பி வழிவதால் அதன் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. வாகனேரி குளமும் தும்பங்கேணி குளமும் நீர் நிரம்பியுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சில கிராமங்களுக்கு நேரில் சென்று நிலமையை பார்வையிட்டதோடு அவர்களுக்கான உடனடி நிவாரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்

No comments:

Post a Comment