07 January 2010

பாதுகாப்பு வலயங்கனில் மீள்குடியேற்றம்

யாழ் குடா நாட்டில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கனில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளின் முதற்கட்டமாக 509 குடும்பங்களைச் சேர்ந்த 1862 பேர் நேற்று தெல்லிப்பளை, உடுவில், கோப்பாய் பிரதேசங்களில் மீள் குடியமர்த்தப்பட்டனர். இதன் ஆரம்ப நிகழ்வு தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் நடந்தது. இதில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர், மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி இப் பிரதேசங்கள் இதுவரை காலமும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன. ஏற்கனவே, 500 மீற்றர் தூரம் பாதுகாப்பு வலயங்களாக வரையறுக்கப்பட்டிருந்தன. இதனை முற்றாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் மீள் குடியேற்றப்பட்டவர்களில் 491 பேர் மாணவர்களாகும். இவர்கள் உட்பட 1000 பேருக்கு பசில் ராஜபக்ஷ சைக்கிள்கள் வழங்கினார்.

இதைவிடவும், மீள்குடியேறிய ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5000 ரூபாவுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment