06 February 2014

வலி வடக்கில் இடம்பெயர்ந்தவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர்

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களின் சொந்த இடங்களிலேயே மீளக் குடியமர்த்தப்படுவர் என யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா பலாலி இராணுவ கட்டளைத் தமைமையகத்தில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் தலைவர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். 

இராணுவத தளபதி அவர்களுடனான சந்திப்பின் போது மேலும் தெரிவிக்கையில் வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்தோர் தொடர்பில் சரியான புள்ளி விவரங்கள் இல்லை. நீங்கள் ஒரு புள்ளி விபரங்களை தருகிறீர்கள். பிரதேச செயலகம் வேறொரு புள்ளி விபரத்தை தருகிறது. மீள்குடியேற்ற அமைச்சு இன்னொரு புள்ளி விவரத்தைத் தருகின்றது. எனவே வலி.வடக்கு மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக சரியான புள்ளி விபரங்களை திரட்டுங்கள் என்றார்.

அதாவது  வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையை வேறாகவும், அவர்களின் வம்சம் பெருகியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கையை வேறாகவும் திரட்டுங்கள்
முகாமில் உள்ளவர்கள், உறவினர், நண்பர்கள் வீடுகளிலுள்ளவர்கள், யாழ்ப்பாணத்துக்கு வெளியே உள்ளவர்கள் என தனித்தனியாக விபரங்களைத் திரட்டுவதோடு மீள்குடியமர்வுக்கு விருப்பமானவர்களின் பெயர் விபரங்களைத் தனியாகவும் திரட்டுங்கள். இந்தத் தகவல்களை எவ்வளவு விரைவாகத் திரட்டித் தருகின்றீர்களோ, அவ்வளவு விரைவாக உங்களை சொந்த இடங்களிலேயே மீளக் குடியமர்த்த முடியும் என்றார்.

மேலும் பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்புக்குச் சுவீகரிக்கப்பட்ட பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளை விடுவிக்க முடியும். பலாலிப் பகுதியில் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கான மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முகாமிலுள்ளவர்கள் முதலிலும் பின்னர் உறவினர், நண்பர்கள் வீடுகளிலுள்ளவர்களும் அதன் பின்னர் யாழ்.மாவட்டத்துக்கு வெளியே உள்ளவர்களும் கட்டம் கட்டமாக மீளக்குடியமர்த்தப்படுவர்.அதுவரை நீங்கள் ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ மேற்கொள்ள வேண்டாம் என்றார் உதய பெரேரா 

No comments:

Post a Comment