08 February 2014

கத்தோலிக்க போதனை நிலையத்துக்காணியை மீட்க நீதிமன்றில் மனு

திருகோணமலை பிரதேசத்தில் கத்தோலிக்க போதனை நிலையம் ஒன்று அமைந்துள்ள காணியை இலங்கை விமானப்படை கையகப்படுதியிருப்பதை ரத்து செய்யுமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் போதனை நிலையத்தின் பாதிரியார் டாக்டர் ஜெயராஜ் ராசையா மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். 

பாதிரியார் இது குறித்து தெரிவிக்கையில் தமது கத்தோலிக்க போதனை நிலையம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விமானப் படையினர் தமது காணியை கையகப்படுத்திய பின்பு அக்காணிக்குள் தாம் வருவதை விமானப்படையினர் தடுத்து வருகின்றனர் என்றார்

நியாயமான காரணமின்றி தமது காணி கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து விமானப்படை அதிகாரிகளிடம் முறையிட்ட போதிலும் உரிய பதில் கிடைக்காததாலும்,  தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளபடியால், இக்காணியை மீண்டும் தம்மிடம் வழங்குமாறு இலங்கை விமானப்படைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு பாதிரியார் டாக்டர் ஜெயராஜ் ராசையா நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்

No comments:

Post a Comment