09 February 2014

ஐ.நா. உதவி செயலாளர் இலங்கை விஜயம்

உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பணிப்பாளராக பணியாற்றும்  ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர்  நாயகம் ஹோலியங் சூ எதிர்வரும் 12ம் திகதி வரை இலங்கையில் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும், சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்த நடத்தவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


இலங்கை வந்தடைந்ததன் பின்னர் கருத்து தெரிவித்துள்ள உதவி செயலாளர் நாயகம் ஹோலியங் சூ, 2013 தொடக்கம் 2017 வரையான ஐ.நா. அபிவிருத்தி உதவி கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கையில் முதல் வருடத்தில் அடையப்பெற்றுள்ள முன்னேற்றம் தொடர்பாக பார்வையிடவுள்ளதாகவும் தனது இலங்கை விஜயமானது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவே அமைந்துள்ளது எனவும் குறிப்பாக நீதி நியாயம் பால்நிலை சமத்துவம் சமூக பொருளாதார அபிவிருத்தி வலுவூட்டல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகிய துறைகள் குறித்து ஆராயவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும், வடமாகாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளவுதுடன்  அங்கு அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடுகின்றார். 

No comments:

Post a Comment