08 February 2014

சர்வதேச அழுத்தங்கள் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும்

இலங்கை அரசின் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு சம்பந்தமான விடயங்களில் சர்வதேச சமூகம் கூடுதலான அழுத்தங்களை இலங்கை மீது பிரயோகிக்குமானால் அது இனங்களுக்கிடையே விரிசலை அதிகரித்து நல்லிணக்க முன்னெடுப்புக்களை பாதிப்படையச் செய்யும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ஜி.ஒப். டொயிடஜ் உடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். 

நீதியமைச்சில் நீதியமைச்சர் ஹக்கீமுக்கும் தென்னாபிரிக்க தூதுவருக்குமான சந்திப்பின் போது நீதியமைச்சர் மேலும் கூறியதாவது சர்வதேச சமூகம் இலங்கை மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்கும், சகல இன மக்களினது மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை அரசு தயாராகி வருகிறது 

உள்நாட்டில் உண்மையை கண்டறிந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆர்வமாக இருக்கிறார். அதுபற்றி தம்மிடம் நம்பிக்கையை தெரிவித்ததாக கூறினார் நீதியமைச்சர். 

இலங்கையில் நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகளில் அதிக அக்கறை கொண்டிருக்கும் தென்னாபிரிக்கா இலங்கையின் பிரச்சனைகளுக்கு உள்நாட்டில் காணப்படும் தீர்வே சிறந்ததாக அமையுமென்று தெரிவித்துள்ள தென்னாபிரிக்கத் தூதுவர் டொயிஜ் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை பொறுத்தவரை அவற்றைப்பற்றி ஆராய்வதற்கு உள்நாட்டு பொறிமுறை உகந்தது என்றார். 

No comments:

Post a Comment