17 February 2014

LLRC பரிந்துரைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்வுகள் குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி  தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை அமர்வுகளை பயன்படுத்தி எதிர்வரும் நடைபெறவுள்ள மேல், தென் மாகாண சபைகளில் வெற்றியீட்டவே அரசு பெரும் முயற்சியெடுத்து வருகிறது. 

மனித உரிமை மீறல்கள், மற்றும் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி விடுத்த கோரிக்கையை அரசு உதாசீனம் செய்து வந்துள்ளது. அரசு ஜே.வி.பி யின் ஆலோசனைகளுக்கு செவிமடுத்தியிருந்தால் அரசாங்கம் இவ்வளவு நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது என தெரிவித்துள்ள ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஹந்துன் நெத்தி நம்பகரமான விசாரணைகளை நடத்தியிருந்தால் அரசு அழுத்தங்களை வெற்றி கொண்டிருக்கலாம். உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment