21 February 2014

அரசியல் தீர்வு எட்டப்படாமால் இணக்கப்பாட்டால் மட்டும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது

இலங்கையில் நிலவும் உள்நாட்டுப் பிரச்சினைகள் அங்குள்ள மக்களாலேயே பேசித் தீர்க்கப்பட வேண்டும் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ள துணை வெளியுறவு அமைச்சர் இப்ராஹிம் இலங்கைப் பிரச்சினையை அங்குள்ள மக்களே பேசித் தீர்ப்பார்கள் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பங்குபெறச் சென்றிருந்த தென்னாப்பிரிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசிய போது இரு தரப்பும் தென்னாபிரிக்காவின் அனுபவங்களை பெற்றுக்கொள்ள விரும்பியதாகவும் குறிப்பிட்டார்.  இதனையடுத்து அரசு தரப்பினர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் தென்னாபிரிக்கா பயணமானார்கள். 

இதேபோல தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் விரைவில் தென்னாபிரிக்காவுக்கு வரவுள்ளதாக குறிப்பிட்ட இப்ராஹிம் இரு தரப்பினரும் தென்னாபிரிக்காவில் நிலவிய அரசியல் பிரச்சினைகள் எப்படித் தீர்க்கப்பட்டன தென்னாபிரிக்காவில் கிடைக்கும் அனுபவங்களை உள்நாட்டில் எப்படி செயல்படுத்த முடியும் என்பது பற்றி இரு தரப்பும் ஆராய்வாய்கள் என தான் நம்புவதாக குறிப்பிட்டார். 
எனினும் தமது நாட்டில் ஏற்பட்டது போல இலங்கையில் அரசுக்கும் த.தே.கூ இற்கும் இடையே ஏன் இணக்கப்பாடு எட்டப்படாமல் இருக்கிறது என்பதை தாங்கள் தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். அரசியல் தீர்வு ஏற்படாமல் இணக்கப்பாட்டால் மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்பதையும் தென்னாபிரிக்க அரசு இரு தரப்பினரிடமும் எடுத்துச் செல்லும் என்றார். 

தென்னாபிரிக்காவுக்கு அரசாங்க பிரதிநிதிகள் விஜயம் தொடர்பாக த.தே.கூ ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முன்னெடுப்பில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையின் கடுமைத் தன்மையை தணிப்பதற்காக அல்லது நீர்த்துப் போகச் செய்வதற்காகவே இலங்கை அரசு தென்னாப்பிரிக்காவிற்கு தூதுக்குழுவை அனுப்பி வைத்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான முயற்சிகளில் தென்னாப்பிரிக்கா அரசு அக்கறை செலுத்தி வந்திருந்தபோதும் இலங்கை அரசாங்கம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.

கடந்த காலங்களில் தென்னாப்பிரிக்க அரச பிரதிநிதிகள் பல தடவைகள் இலங்கை வந்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாகவும், ஓராண்டுக்கு முன்னர் இலங்கை அரசு மற்றும் த.தே.கூ இனர் தனித்தனியாக தென்னாப்பிரிக்கா சென்று வந்துள்ளதாக தெரிவித்த த.தே.கூ சுமந்திரன் இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் காட்டத் தவறியபடியாலேயே தென்னாப்பிரிக்காவின் ஈடுபாட்டில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றார்.

ஆனால், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டுவரப்படவுள்ள சூழ்நிலையில் இன்னொரு நாடொன்றின் அனுசரணையுடன் நல்லிணக்க முயற்சிகள் நடப்பதாக இலங்கை அரசு சர்வதேசத்துக்கு காட்டும் முயற்சியாகவே அரச தூதுக்குழுவின் தென்னாபிரிக்க பயணம் என குறிப்பிட்ட த.தே.கூ தென்னாபிரிக்காவின் பங்களிப்புடன் இடம்பெறும் இணக்க முயற்சிகளை த.தே.கூ வீணாக்குகிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் தென்னாபிரிக்காவின் முயற்சிகளில் நன்மை உள்ளவரை அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்கிறது. 

எதிர்காலத்தில் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச நாடோ அல்லது ஐநா உள்ளிட்ட அமைப்புகளோ இலங்கையின் இனப்பிரச்சனையைத் தீர்க்க முன்வந்தால் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளத் கூட்டமைப்பு தயார் என்கிறது.

No comments:

Post a Comment