அம்பாறை மாவட்டம் மீனவர் சங்க ஏற்பாட்டில் பொத்துவில் சின்ன உல்லைப் பிரதேசத்தில் மீனவர் அமைப்புக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடத்தினர். இதில் கிழக்கு மாகாண மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் கொண்டனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீன் விலையை உயர்த்தல், மானியமாக எண்ணெய் வழங்க கோரல், இழந்த காணிகளை மீள வழங்குதல், ஒலுவில் துறைமுக மீனவர் பாதிப்புக்கு நட்டஈட்டை வழங்க கோரல், பொத்துவில் பொதுச்சந்தை பிரச்சனைக்கு தீர்வை காணுதல், பொத்துவில் ஆசிரியர் பிரச்சனை, பாதை அமைப்பு வேலைகளை துரிதப்படுத்தல், உல்லை மீனவர் வாடி பிரச்சனைகளை தீர்த்து வைத்தல், மீனவர் கிராமங்களுக்கான மின்சார வசதியை ஏற்படுத்தி தரல், காணாமற் போனோர்களை மீட்டுத் தரல், வெளிநாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மீனவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுத்தல் போன்ற கோசங்களை முன்வைத்தனர்.
இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாகவும், உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment