21 March 2014

விமர்சனையாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை நிறுத்த வேண்டும்

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் தலையீடுகளை மேற்கொள்ளல் மற்றும் அசாதாரணமான உபாயங்களைக் கையாளுதல் என்பவற்றை இலங்கை முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை யின் பிரதிநிதி பீட்டர் ஸ்பிலின்டர் ஜெனீவா மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற உத்தியோகபற்றற்ற பேச்சுவார்த்தையின் போது தெரிவித்துள்ளார்.

பீட்டர் ஸ்பிலின்டர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர்களான ருக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மஹேஷன் ஆகியோரை விடுதலை செய்தமை சிறந்த விடயம் என்றாலும் இதனூடாக உலகத்தை ஏமாற்ற முற்படக்கூடாது.

இலங்கையின் போர் சூழல் குறித்து உண்மை நிலைமை தொடர்பில் அமைதியாகக் கருத்துத் தெரிவிக்கும் விமர்சனையாளர்களின் குரலுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கைத் தரப்பினர் நிறுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி ஐ.நா மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு இலங்கை வெளியிட்டுள்ள இராஜதந்திர அறிக்கையின் ஊடாக இவர்கள் விடுதலைப் புலிகள் மீள் எழுச்சிக்கு துணைப்பட்டுள்ளதாக அடையாளப்படுத்த முற்பட்டுள்ளமையை  இது போலியான குற்றச்சாட்டு என தெரிவித்துள்ள பீட்டர் இதனூடாக இலங்கை அரசாங்கம் தமக்கு எதிரானவர்களை அடக்குவதற்கும் சம்பந்தப்பட்டவர்களின் பெயரை கலங்கப்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக சர்வாதிகார ஆட்சியைக் கொண்ட சில நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைய முற்பட முயற்சிப்பதாக குறிப்பிடுகின்றார்

கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்ணான்டோ தனது கைது பற்றி பி.பி.சி க்கு தெரிவிக்கையில் இதனை திட்டமிட்ட முயற்சியாகவே தான்; கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எதிர் கருத்துக்களைக் கொண்டவர்கள், விமர்சிப்பவர்கள் மற்றும் சவால் விடுபவர்களை அடக்குவதற்கான தலையீடாகவே இதனை எம்மால் நோக்க முடிகின்றது. இலங்கைக்கு வெளியில் வாழ்பவர்களால் நாட்டுக்குள் என்ன நடக்கின்றது என்பதனை அறிய முடிவதில்லை. ஆகவே, இது தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்படும் என நான் எதிர்பார்க்கின்றேன். என்னுடன் நெருக்கமானவர்கள் மற்றும் கடந்த காலங்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களின் பாதுகாப்பு குறித்து கவலையடைவதாக குறிப்பிட்ட ருக்கி பெர்ணான்டோ 

தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளானது சர்வதேச ஊடகங்களுடன் மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டது. நான் கைது செய்யப்பட்டது ஜெனீவா நடவடிக்கைகளுக்கு வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment