10 May 2014

எல்எல்ஆர்.சி பரிந்துரைகளில் 70 சதவீதமானவை அமுல்

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 70 சதவீதமானவை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் மகஜன எக்சத் பெரமுனவின் தலைவருமான அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசா பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
தினேஷ் குணவர்த்தனா மேலும் தெரிவிக்கையில் அரச ஊழியர்களின் நியமனங்கள் இடமாற்றம் என்பவற்றில் அரசியல் தலையீடுகள் உள்ளது என்ற கருத்திற்கு நான் ஒரு போதும் உடன்பட மாட்டேன். பொதுச் சேவைகள் ஆணைக்குழு உட்பட சகல சுயாதீன ஆணைக்குழுக்களும் சுதந்திரமாகவே இயங்குகின்றன. அங்கு எந்தவித பக்கச் சார்புகளும் காணப்படவில்லை.
 மூன்று தசாப்தங்கள் அழிவடைந்த நாடு தற்போது சகல துறைகளிலும் முன்னேற்றப்பட்டு  வருகிறது. நல்லாட்சி என்ற மாயையை சுமந்து கொண்டு செயற்படும் நாடுகளில் கூட நல்லாட்சி இல்லை.

மாறாக தற்பொழுது நல்லாட்சி இடம்பெறுவதுடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 70 சதவீதமானவை நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது என்றும் எஞ்சிய பரிந்துரைகளும் கிரமமாக நடைமுறைப்படுத்தப்படும அமைச்சர் தினேஷ் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment