1990ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் பகுதியில் வைத்து கடத்திக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் அவ்வாறு புதைக்கப்பட்டவர்களின் சடலங்களை தோண்டுமாறு கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து களுவாஞ்சிக்குடி பொலிஸார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து இவர்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்தனர். இந்த முறைப்பாட்டு பதிவுகள் இன்று ஆரம்பமாகி (07-07-2014) நாளை வரை இடம்பெறும் என களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இந்திக லொக்குகே தெரிவித்துள்ளார். இதுவரை தமக்கு 28 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். 12-07-1990 அன்று கல்முனையிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்ற தமது உறவினர்கள் குருக்கள் மட்டத்தில் வைத்து புலிகளால் கடத்தி கொலைசெய்யப்பட்டு கடற்கரையோரம் புதைத்துள்ளதாகவும், அப்புதைகுழிகளை தோண்டி இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment