06 July 2014

சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கோரிக்கை

இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையில் 1972 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட கச்சதீவை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்காக இந்தியா சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்வதே ஒர வழியெனவும். கச்சத்தீவை மீளப்பெறவும் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்கவும் வழிசமைக்கும் என தமிழக மீனவ அமைப்புக்களின் கூட்டமைப்பு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். 

இரு நாடுகளிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ஒரு நாடு மீறும்பட்சத்தில் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள மற்றைய நாட்டுக்கு உரிமையுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ள மீனவ அமைப்புக்களின் கூட்டமைப்பு தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே குரலில் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் இந்;திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
 
இதேவேளை கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் கட்சி விவகாரங்களுக்கு பொறுப்பாகவுள்ள பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பீ முரளிதர் ராவ் தெரிவிக்கையில் கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் இறையாண்மை குறித்து மத்திய அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யும் எனவும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லை தொடர்பான வியடம் தீர்க்கப்பட்ட ஒன்றென சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசாங்கம் எழுத்து மூலம் அண்மையில் தெரிவித்திருந்ததது. எனினும் தமிழக முதல்வரும் ஏனைய மாநில அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
 
இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் சரியான முறையில் கையாளப்படவில்லை என பாரதீய ஜனதா கட்சி கருதுவதாகவும் இந்த எழுத்துமூல அறிவிப்பு குறித்து மத்திய அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் முரளிதர் ராவ் கேட்டுக்கொண்டார். கச்சத்தீவு தனிப்பட்ட விடயமாக கருதப்படமாட்டாது எனவும் மீனவர்களின் நலன்களில் பாரிய கவலையை ஏற்படுத்தும் விடயங்களின் ஒரு பகுதி எனவும் குறிப்பிட்டார்.
 
இதேவேளை கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாரம் இந்தியாவுக்கு செல்லவுள்ளதாகவும் அவர்இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ்சிற்கும் இடையிலான சந்திப்பின் போது பாக்கு நீரிணைப்பகுதியில் மீன்பிடிப்பதில் நிலவும் பிரச்சனைகளை ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு கட்டணம் செலுத்தி கச்சத்தீவுப் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி பெறுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment