06 July 2014

ராஜிவ்காந்தி கொலை குற்றவாளிகளின் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு

முன்னாள்  இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்வதற்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குறிப்பிட்ட குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் இவர்களை தமிழக அரசு விடுதலை செய்யலாம் என்றும் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த பெப்ரவரி மாதம் 19ம் திகதி முடிவு செய்தது.
 
தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததையடுத்து  இவர்களின் விடுதலைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
 
இன்றைய நிலையில் 08-07-2014 அன்று தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர்கள் வாதாவார்கள் என்றாலும் இந்த வழக்கு தொடர்பான முழுமையான விவரங்களை மத்திய அரசு ஆராயும். இது ஒரு மிக மோசமான குற்றச் செயல் எனவும்  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை மறக்க முடியாது என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
 
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளது. இந்திரா காங் கிரஸின் அரசியல் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தாலும், பிரதமரின் கொலையாளிகளை விடுவிக்க பா.ஜ.க. ஒருபோதும் விரும்பமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment