19 August 2014

உலகிலிருந்து அன்னியப்படுவது இலங்கை அரசின் கொள்கையல்ல

உலகிலிருந்து அன்னியப்படுவது இலங்கை அரசின் கொள்கையல்ல. மாறாக நல்லிணக்க செயற்பாடுகளுக்காக உலகுடன் சாதகமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத்தயார் என்று  வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்  இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள  இலங்கை எழுச்சி பெறும் தேசமொன்றுக்கான சவால்கள்” (Sri lanka Challenges to a Rising Nation) என்ற தொனிப் பொருளில் நடைபெற்று வரும் இந்த கருத்தரங்கின் ஆரம்ப நாளான நேற்றைய தினம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமர்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

ஜீ.எல். பீரிஸ் மேலும் உரையாற்றுகையில், சர்வதேசத்தின் தொடர்ச்சியான அழுத்தங்கள் எமக்குள்ள சவால்களில் ஒன்றாகும். பாதகமான அழுத்தங்கள் நாட்டில் தற்பொழுது முன்னெடுத்து செல்லப்படும் செயற்பாடுகளுக்கு ஒரு உதவியாக அமையாது. மாறாக அது பாதகமானதாகவே அமையும் என்றார்.

இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் கொண்டுவரவுள்ள தீர்மானங்களின் இரண்டாவது செயற்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவை ஏற்றுக் கொள்ளக்குடியவை.

ஆனால் அதன் 10 வது செயற்பாட்டில் கூறப்பட்டுள்ளவையை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் உள்ளூர் பொறி முறையைப் பலப்படுத்த வேண்டுமென்று 2 வது செயற்பாட்டு பந்தியில் கூறப்பட்டுள்ளது. அதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஏனெனில், அதனை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து ஜனாதிபதி அவர்கள் ஏற்கனவே அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

அதேபோன்று அதன் 10 வது பந்தியில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. அதனை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் சர்வதேச விசாரணைகள் நடத்தும் எந்தவித தேவையும் கிடையாது. இது உள்ளூர் பொறிமுறை ஒன்றின் மூலம் அவற்றை நாம் தீர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள் ளோம். அதற்கான நடவடிக்கை களும் தற்பொழுது முன்னெடுக் கப்பட்டு வருகிறது. உள்ளூர் பொறிமுறையின் மூலமே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றே நாம் நம்புகிறோம் என்றார்.

சர்வதேச அழுத்தங்களின் மூலம் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்த முடியும் மாறாக அது ஸ்திரத்தன்மைக்கோ, சுபீட்சத்திற்கோ உதவ போவதில்லை என்றார். வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை உதாரணமாக கொள்ள முடியும்.
13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று சிலர் கூறியவருகின்றனர். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள சகல மாகாணங்களுக்கும் பொலிஸ் அதிகாரத்தை தவிர சகல அதிகாரங்களும் வழங்கப்பட் டுள்ளன. ஆனால், வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்று சிலர் தவறான கருத்துக்களை கூறிவருகின்றனர். ஏனெனில், மாகாண சபை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய காணி உட்பட சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடபகுதி மக்களுக்கு தேவையான சகல வசதிகளும் பெற்றுக் கொடுக் கப்பட்டுள்ளன. கல்வி, சுகாதாரம் வீதி கட்டமைப்பு, பாடசாலை போன்ற சகல அடிப்படை வசதிகளும் அரசாங்க செலவில் வழங்கப்பட்டுள்ளமையினால் அங்குள்ள மக்கள் அதனை வரவேற் கின்றனர். இது தொடர்பில் எந்த ஒருவருக்கும் தனிப்பட்ட முறையில் கேட்டறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment